உலகையே ஆட்டிப்படைக்கும் புதிய கொரோனா வைரஸ் எங்கிருந்து தோன்றி இருக்கும் அப்படின்னு சொல்லி எல்லார் மனசுலயும், ஒரு கேள்வி இருக்கிறது. விலங்கிலிருந்து மனிதனுக்கு வந்த வைரஸ் என்று நமக்குத் தெளிவாகத் தெரியும். விஞ்ஞானிகள் சரியாக இது எங்கிருந்து வந்திருக்கும் ? எப்படி விலங்கிலிருந்து மனிதனுக்கு வந்திருக்கும் ? என்ற ஒரு ஆய்வில் இறங்கி இருக்காங்க. இந்த ஆய்வினை சக்தி வாய்ந்த நாடுகளின் உளவுத் துறையும் சேர்ந்து உள்ளது.
சீனா ஆய்வகத்தில் துள்ளி குதித்த வைரஸ்ஸா ?
கொரோனா சீனாவின் ஆய்வகத்தில் இருந்து துள்ளி குதித்த வைரஸ்ஸா என்ற கேள்வியை முன்வைத்து விஞ்ஞானிகளும், உளவுத்துறையும் விடைதேட களமிறங்கி இறங்கியிருக்கிறது. சீனாவின் சுகாதாரமற்ற பாம்புக் கறி விற்கும் மார்க்கெட், வெளவ்வால் கறி விற்கும் மார்க்கெட் அந்த மார்க்கெட்டில் இருந்து உலகிற்கு பரவியது கொரோனா என இதுவரை நம்பப்படுகிறது.
வேறு கோணத்தில் அணுகும் அமெரிக்கா :
அமெரிக்க உளவுத்துறை தங்களின் தகவல்களின் அடிப்படையில் இதை வேறு கோணத்தில் அணுகுகிறார்கள். சீனாவின் வுகான் நகரிலுள்ள ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டதா ? புதிய கரோனா வைரஸ் என ரகசிய விசாரணையை ஆரம்பித்திருக்கிறார்கள். சீனாவில் ஆய்வகத்தில் வேலை பார்த்த ஒருவருக்கும் முதலில் பரவி பின்பு அவரிடம் இருந்து சீன மக்களுக்கு பரவியதா? என்ற கோணத்தில் விசாரிக்க அமெரிக்க உளவுத்துறை.
சீன அரசு முட்டுக்கட்டை :
கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்பே அமெரிக்காவுக்கு இந்த சந்தேகம் வலுத்து இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் தனது ஆய்வகத்தில் சோதனை செய்ய அனுமதிக்க சீனா மறுத்தது.வைரஸ் பரவலுக்கு பின் சீன பல்கலைக்கழகங்களில் வைரஸ் உருவான இடம் குறித்த ஆய்வுகளில் முடிவுகளுக்கும் சீன அரசு முட்டுக்கட்டை போடுவதால் சந்தேகம் வலுக்கிறது.
அமெரிக்க உளவுத்துறை என்ன சொல்றாங்க ?
சீனா வைரசால் பாதிக்கப்பட்ட விதமும், மீண்டெழுந்த விதமும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. முதன்முதலில் உலகத்தில் பாதிக்கப்பட்ட நாடு சீனா தான். ஆனால் முதன் முதலில் ஊரடங்கை எல்லாம் தளர்த்தி விட்டு, ரயிலை இயக்கி , சுற்றுலாத்தலங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்த நாடும், உலகமே ஊரடங்கில் இருக்க சீனாவில் சீன மக்கள் வீதிகளில் குவிந்தார்கள். இதனால் உலக நாடுகளின் பார்வை, சீனா மீது திரும்புகிறது. எப்படி சாத்தியம் ? என்று
மீண்டு வந்த சீனா :
முதன்முதலில் உலகத்தில் பாதிக்கப்பட்ட நாடு என்ற அடிப்படையில் சீனாவில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் 82 ஆயிரத்து 341 பேர். இதுல மரணமடைந்தவர்கள் 3342 பேர், அதாவது மரணம் அடைந்தவர்கள் பட்டியல்ல ஒன்பதாவது இடம் சீனாவிற்கு கிடைக்கிறது. முதல் முதல்ல இந்த வைரஸ் கிருமி உலகம் முழுக்கப் பரவும் போது சீனாவுக்கு தான் நம்பர் ஒன் இடம் இருந்து, அதிக மக்கள் அங்கே செத்து விழுந்தார்கள். ஆனால் இப்போது சீனா ஒன்பதாவது இடத்திற்கு வந்து இருக்கின்றது.
அமெரிக்கா ஒன்றாவது இடத்திற்கு போயிருக்கு. மரணமும் அங்கே தான் அதிக அளவு நிகழ்ந்துள்ளது. சீனாவில் குணமடைந்தவர்கள் அப்படினு பார்க்கும் போது, 77,892. உலகமே ஊரடங்கில் கிடைக்க சீனா மட்டும் எப்படி மீண்டு வந்தது. ஏன் ? அங்கே வைரஸ் பரவல் நடந்தது. எங்கிருந்து வந்துருக்கும் அப்படிங்கிற கோணத்தில் விசாரித்து வருகிறது உளவுத்துறை.
புதிய கொரோனா வைரஸ் இயற்கையா ? செயற்கையா ? என்பதுதான் கேள்வி.முதலில் வைரஸை கட்டுப்படுத்துவோம், பிறகு சீனாவை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிப்போம் என அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் சர்வதேச பத்திரிகைகளுக்கு தகவல் சொல்லி இருப்பது குறிப்பிடத்தக்கது.