Categories
உலக செய்திகள்

புரட்டி எடுத்த கொரோனா….. 7 லட்சம் பாதிப்பு, 35,000ஐ தொடும் மரணம் – 3 நாளில்10,977 பேர் பலி ..!!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் கொத்துக்கொத்தாய் மக்கள் செத்து மடிவது உலக நாடுகளை உலுக்கியுள்ளது. 

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

Coronavirus In Us America Latest News Update Today Us Records ...

 

நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 2,182,025 பேர் பாதித்துள்ளனர். 145,513 பேர் உயிரிழந்த நிலையில், 547,094 பேர் குணமடைந்துள்ளனர். 1,438,258 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 56,595 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.

Why even America isn't testing everyone for coronavirus. Because ...

 

உலக வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடும் விளைவுகளை சந்தித்துள்ளது. தினமும் கொத்துக்கொத்தாக மரணம் ஏற்பட்டு வருவதால் சொல்லமுடியாத துயரை அமெரிக்கா சந்தித்து வருகின்றது. உலக நாடுகளுக்கு சீனா அனுப்பிய கொரோனா மறுத்து, சிகிச்சை பொருட்களையெல்லாம் தங்கள் நாட்டிற்கு மிரட்டி திருப்பி விட்ட அமெரிக்காவில் மரணத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அதிபர் ட்ரம்ப் கொரோனாவில் இறுதி கட்டத்தை கடந்து விட்டோம், இனி கவலை இல்லை என்று தெரிவித்தார். ஆனால் அமெரிக்காவால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை.

Coronavirus: A problem unlike anything else Trump has faced - BBC News

நேற்று ஒரே நாளில் புதிதாக 29,567 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி 2,174 பேர் கொரோனாவால் இறந்துள்ளதால் மொத்த பலி எண்ணிக்கை 34,617 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழு லட்சத்தை நெருங்குகின்றது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 57,508 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கடந்த 3 நாளில் மட்டும் ( 16ம் தேதி – 2,174 , 15ம் தேதி – 2,618, 14ம் தேதி – 6,185 பேர் ) 10,977 பேர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளை உலுக்கியுள்ளது.

 

Categories

Tech |