அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் உயிரிழப்புகள் அதிகமாவதோடு வேலை இழப்பு பிரச்சனையும் அதிகரித்துள்ளது
உலக நாடுகளில் வெகுவாக பரவ தொடங்கிய கொரோனா தொற்றுக்கு 2152000 பேர் பாதிக்கப்பட்டு 145,000 பேர் உயிரிழந்துள்ளனர் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் புள்ளிவிபரம் கொடுத்துள்ளது. இதில் அதிக உயிர்களை பலி கொடுத்த நாடாக அமெரிக்காவே உள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து, இன்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 67 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ளனர்.
அதோடு கடந்த வாரம் 52 லட்சம் அமெரிக்கர்கள் வேலைக்காக விண்ணப்பித்து தற்போது விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 2.2 கோடியாக அதிகரித்து உள்ளது எனவும் அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இது அமெரிக்காவில் இருக்கும் வேலை இழப்பை சுட்டிக்காட்டுகிறது. தொற்று பாதிப்பினால் ஏழு அமெரிக்க தொழிலாளர்களின் ஒருவர் வேலை இழப்பை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது.