Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு காரணமாக மிகப்பெரும் பொருளாதார சவால் ஏற்பட்டுள்ளது – ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திரகாந்த தாஸ்!

கொரோனாவால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை ரிசர்வ் வங்கி மிக தீவிரமாக கவனித்து வருகிறது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திரகாந்த தாஸ் கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது ஏற்பட்டிருப்பது மிகப்பெரும் பொருளாதார சவால் என தெரிவித்த அவர், வங்கிகள் வழக்கம்போல் இயங்குவதை ஆர்பிஐ உறுதி செய்துள்ளது, இக்கட்டான சூழலிலும் வங்கிகள் இயங்குகின்றன என தகவல் அளித்துள்ளார். உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார சரிவை சந்தித்து வரும் நிலையில் இந்திய பொருளாதார வளர்ச்சி 1.9% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் ஏற்றுமதி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் வாகன உற்பத்தியும் வெகுவாக குறைந்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான போருக்கு ஆர்பிஐ முழுமையாக தயாராக உள்ளது என்றும் உலகளவில் பொருளாதார நிலையற்றத் தன்மை நிலவி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் உலகிலேயே ஜிடிபி வளர்ச்சி கணிசமாக உயர்வு கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று என தெரிவித்த அவர், இந்தியாவின் வளர்ச்சி 1.9% என ஐஎம்எஃப் கணித்துள்ளது, இது ஜி-20 நாடுகளில் அதிகம் என கூறியுள்ளார்.

கொரோனா பரவாமல் தடுப்பதே தற்போது முக்கிய நோக்கமாக இருக்கிறது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திரகாந்த தாஸ் கூறியுள்ளார். கொரோனா பாதிப்பால் கச்சா எண்ணெய் விலையிலும் நிலையற்றத் தன்மையே நீடிக்கிறது என தகவல் அளித்த அவர், இந்தியாவில் அரிசி, கோதுமை இருப்பு உள்ளதால் தட்டுப்பாடு ஏற்படாது, இந்தாண்டு நெல் பயிரிடப்படும் பரப்பளவு 37%ஆக அதிகரித்துள்ளது என கூறியுள்ளார். மேலும் 2021-21ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |