அரசி, கோதுமை, ரூபாய் நோட்டுகளை தட்டுப்பாடு ஏற்படாது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
மும்பையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், தொழிற்சாலைகள் இயங்காததால் நாட்டின் மின்சார தேவை 25 சதவீதம் வரை குறைந்துள்ளது. ஊரடங்கு காலகட்டத்தில் இணையப் பயன்பாடு மற்றும் இணையதள பணப்பரிமாற்ற தேவை அதிகரித்துள்ளது. அரிசி கோதுமை ரூபாய் நோட்டுக்கு தட்டுப்பாடு இருக்காது. இந்தியாவில் அரிசி கோதுமை இருப்பு உள்ளதால் தட்டுப்பாடு இருக்காது. தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதற்காக ஆர்பிஐ வங்கிகளுக்கு போதுமான ரூபாய் நோட்டுகளை தந்துள்ளது.
சிறு குறு தொழில் துறையினருக்கு கடன் வழங்க ஏதுவாக வங்கிகளில் பணம் கையிருப்பு உள்ளதை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். தற்போதைய கொரோனா பாதிப்பு பொருளாதாரத்தில் சவாலாக உள்ளது.வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் கடனுக்கான ரிவர்ஸ் ரெப்போ வட்டி வீதம் 4%லிருந்து 3.75 %ஆக குறைக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் கூடுதல் கடன் பெறும் வகையில் ரிவர்ஸ் ரெப்போ வட்டி வீதம் 0.25 சதவீதமாக குறைக்கபட்டுள்ளது.