என்ன குழம்பு செய்வதென்று குழப்பமா உங்களுக்கு , கத்தரிக்காய் குழம்பு செய்வது பற்றி பார்ப்போம்.
மசாலா செய்துகொள்ளத் தேவையானவை:
வரமல்லி – ஒரு ஸ்பூன்
கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன்
உளுந்தம்பருப்பு – அரை ஸ்பூன்
மிளகு – அரை ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
வெந்தயம் – கால் ஸ்பூன்
கருவேப்பிலை – சிறிதளவு
தேங்காய் துருவல் – அரை கப்
புளி – எலுமிச்சை பழ அளவு
குழம்பு செய்ய தேவையானவை:
கடுகு, உளுந்தம்பருப்பு – அரை ஸ்பூன்
வெந்தயம் – கால்ஸ்பூன்
கருவேப்பிலை – சிறிதளவு
சின்ன வெங்காயம் – 10
கத்தரிக்காய் – 5
பூண்டு – 3 பல்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை ஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
தண்ணீர் – 3 கப் அளவு
உப்பு – தேவையான அளவு
நல்ல எண்ணெய் – 3 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் வரமல்லி, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகு, சீரகம்,வெந்தயம், அனைத்தையும் லேசாக வருத்து கொள்ளும் பொழுது, சிறிதளவு கறிவேப்பிலை, தேங்காய்த் துருவலையும் சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளுங்கள். ஊறவைத்துக் கொள்ளுங்கள். வறுத்து எடுத்து வைத்திருப்பதையும், ஊற வைத்திருக்கும் புளியையும் எடுத்து அனைத்தையும் மிக்சியில் போட்டு நன்றாக மைபோல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
பிறகு அடுப்பில் வாணலியை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு சேர்த்து பொரிந்ததும், வெந்தயம், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், உரித்து வைத்திருக்கும் பூண்டு, நறுக்கி வைத்திருக்கும் கத்தரிக்காய் அனைத்தையும் எண்ணெயில் நன்றாக வதக்குங்கள். வதங்கி வரும்பொழுது அரைத்து வைத்திருக்கும் மசாலா கலவையை இதோடு கொட்டி நன்றாக கிளறி விடுங்கள்.
கிளறி விட்ட பின்னர், மஞ்சள் பொடி, வத்தல் பொடி, குழம்பு மிளகாய்த்தூள் அனைத்தையும் சேர்த்து நன்றாக கத்தரிக்காயில் மசாலா சேரும்படி கிளறி விடுங்கள். கிளறிய பின்னர் 3 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றுங்கள். தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். 15 நிமிடம் மூடி வைத்து கொதிக்க விடுங்கள். கத்தரிக்காய் குழம்பு ரெடி..!