கொரோனா பாதிப்பை சரி செய்வதற்கு மாநில அரசு அதிகளவில் கடன் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கொரோனவால் உலக அளவில் பொருளாதார நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் ஏற்றுமதி மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வராமல் தடுப்பதே தற்போது முக்கிய நோக்கம். இந்த ஆண்டில் நெல் பயிரிடும் பரப்பளவு 37 சதவீதமாக அதிகரித்துள்ளது.மார்ச் மாதம் வாகன உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது.2021 -22 இல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 இருக்கும்.
கச்சா எண்ணெய் விலையிலும் நிலையற்ற தன்மையை நீடிக்கிறது. சர்வதேச நிதியம் இந்தியாவின் வளர்ச்சி 1.9 கணித்துள்ளது. ஜி 20 நாடுகளிலேயே அதிக வளர்ச்சி விகிதம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. கொரோனா காரணமாக நாட்டின் மின்சாரத் தேவை 20 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை குறைந்துள்ளது.
இந்த ஆண்டு நெல் பயிரிடப்படும் பரப்பளவு 37 சதவீதம் அதிகரித்துள்ளது. அவசர தேவைக்காக ரிசர்வ் வங்கியிடமிருந்து 60% வரை கூடுதலாக மாநில அரசுகள் கடன் பெறலாம். கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பை சீர் செய்வதற்காக மாநில அரசு கூடுதலாக கடன் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.