அமெரிக்காவில் கொரோனா குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டு 2025 ஆம் ஆண்டு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்னும் தகவலை வெளியிட்டுள்ளனர்
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா குறித்து கணித கணக்கீடு மூலமாக அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். ஆய்வின் முடிவில் சில முக்கிய அம்சங்களை வெளியிட்டுள்ளனர்.
சமூக இடைவெளி விடுவதை உடனடியாக நிறுத்தினால் அது அதிக அளவு புதிய கொரோனா நோயாளிகளை உருவாக்கக்கூடும்.
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை எதுவும் இதுவரை இல்லாத நிலையில் 2022ஆம் ஆண்டு வரை சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டியது அவசியம்.
இலையுதிர் காலத்தில் சமூக இடைவெளியை தளர்த்தினால் அக்காலத்தில் ஏற்படும் ப்ளூ காய்ச்சலுடன் சேர்ந்து கொரோனா மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
அதோடு கொரோனா தொற்று 2025 ஆம் ஆண்டு மீண்டும் எழுச்சி பெற்று அதன் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளும் உள்ளது என தெரிவித்துள்ளது.