Categories
தேசிய செய்திகள்

கடன் வழங்க ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு… ரிவர்ஸ் ரெப்போ வட்டி 3.75%ஆக குறைப்பு – ஆர்பிஐ அதிரடி அறிவிப்புகள்!

கொரோனா பாதிப்பால் வங்கிகள் தாராளமாக கடன் வழங்க ரூ.50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் தகவல் அளித்துள்ளார். கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்வதற்காக மாநில அரசுகள் கூடுதலாக கடன் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவசர தேவைகளுக்கு ரிசர்வ் வங்கியிடம் இருந்து மாநில அரசுகள் 60% வரை கூடுதல் கடன் பெறலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

மேலும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் கடன்களுக்கான ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 4% லிருந்து 3.75%ஆக குறைக்கப்படுவதாகவும், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை, 4.4 % ஆக தொடரும். சிறு, குறு தொழில் துறையினருக்கு கடன் வழங்க ஏதுவாக வங்கிகளில் பணம் கையிருப்பு உள்ளதை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஜப்பான், ஜெர்மனியின் ஒட்டுமொத்த பொருளாதார அளவிற்கு உலகம் முழுவதும் சரிவு இருக்கும்.

உலக பொருளாதாரம் தொடர்பாக சர்வதேச நாணய நிதியகம் கணிக்கப்பட்டுள்ளது. பங்குச் சந்தை தங்குதடையின்றி செயல்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி நாட்டில் பணப்புழக்கம் சீராக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஜி-20 நாடுகளில் இந்தியாவின் வளர்ச்சி 1.9 சதவீதம் அதிகரிக்கும் என சர்வதேச நாணய நிதியகம் கணித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |