Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தயிர்சாதத்திற்கு ஏற்ற ருசியான வாழைக்காய் வறுவல்..!!

சாம்பார்சாதம், தயிர்சாதம், மோர்சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற ருசியான வாழைக்காய் கருவல் செய்வது பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

வாழக்காய் 2

மசாலாவிற்கு தேவையானவை:

பூண்டு                     –  5 பல்
இஞ்சி                       – ஒரு சின்ன துண்டு
பச்சைமிளகாய் –  2
மிளகாய்தூள்      –  அரை ஸ்பூன்
கரம் மசாலா       – அரை ஸ்பூன்
மல்லித் தூள்        –  அரை ஸ்பூன்
மஞ்சள்தூள்         – அரை ஸ்பூன்
சோம்பு                  –  ஒரு ஸ்பூன்
உப்பு                       –  தேவையான அளவு

வறுவல் செய்யும்பொழுது தேவையானவை:

கறிவேப்பிலை        – சிறிதளவு
பெருங்காயம்           – அரை டீஸ்பூன்

செய்முறை:

முதலில் 2 வாழைக்காயை எடுத்து நன்றாக கழுவி அரை வேக்காடாக அவித்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் மிக்ஸியில் பச்சை மிளகாய், பூண்டு, சோம்பு, இஞ்சி, மிளகாய்த்தூள், கரம் மசாலா, மல்லித் தூள், மஞ்சள் பொடி, உப்பு இவை அனைத்தையும் சிறிது தண்ணீர் விட்டு மைபோல அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் அவித்து வைத்திருக்கும் வாழைக்காய்  தோல் உரித்து விட்டு வட்டமாக சிறு சிறு துண்டுகளாக கட் பண்ணி எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து வைத்திருக்கும் மசாலாவை ஒரு தட்டில் கொட்டி அதில் நறுக்கி வைத்திருக்கும் வாழைக்காய் முன்னும் பின்னும் மசாலா சேரும்படி  எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சிறிதளவு உங்களுக்கு தேவையான எண்ணெய் ஊற்றி, அதில் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு, மசாலா தடவி வைத்திருக்கும் வாழைக்காய் சேர்த்து வறுத்து எடுங்கள். இரண்டு பக்கமும் வேகவிட்டு வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை சாம்பார்சாதம், தயிர்சாதம் ஆகியவற்றிற்கு மிகவும் ருசியாக இருக்கும்.  இப்பொழுது சுவையான வாழைக்காய் வறுவல் ரெடி..!

Categories

Tech |