நாடு முழுவதும் 1,007 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இதையடுத்து நாட்டில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 13,387 ஆக அதிகரித்துள்ளது.
அதில், 11,201 பேருக்கு தற்போது சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. 1,748 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 437 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். சீனாவில் வுஹான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் உலகளவில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. சீனாவில் கடத்த சில நாட்களாக கொரோனா தொற்று இல்லாத நிலையில், மீண்டும் வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்துள்ளது.
தற்போது சீனாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 82,692 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்கா, ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கொரோனாவில் இருந்து மீள முடியாமல் திக்கித் திணறி வருகின்றன. இந்தியாவிலும் பாதிப்பு அதிகரித்து கொண்டு தான் செல்கிறது. இதன் காரணமாக, நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு 2ம் கட்டமாக அமல்படுத்தப்பட்டு 24வது நாளாக அமலில் உள்ளது.
மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், நேற்று நாடு முழுவதும் 826 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மேலும் 28 பேர் உயிரிழந்தனர். மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 12,759 ஆக அதிகரித்திருந்தது. இந்த நிலையில், இன்று மேலும் 1,007 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 13,387 ஆக அதிகரித்துள்ளது.