Categories
சென்னை மாநில செய்திகள்

நற்செய்தி….. வரத்து அதிகரிப்பால், குறைந்த விலை….. கிலோ ரூ10 தான்….!!

கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளதாக மார்க்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த இரண்டு நாட்களாக காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. ஒரு கிலோ பல்லாரி வெங்காயம் 10 முதல் 14 ரூபாய்க்கும், தக்காளி, கேரட், பீட்ரூட் உள்ளிட்டவை கிலோ 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சாம்பார் வெங்காயம் என்று அழைக்கப்படும் சின்ன வெங்காயத்தின் விலையை தவிர மற்ற அனைத்து காய்கறிகளின் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இது குறித்து கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகம் தெரிவித்ததாவது,

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து தற்போது அதிகமாக வருகிறது. நாளொன்றுக்கு ஐந்திலிருந்து ஆறு டன் காய்கறிகள் வந்து இறங்குகின்றனர். தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நிலையில் 3 டன் காய்கறிகளின் தேவை மட்டுமே ஏற்படுகிறது.

அதை வாங்க கூட தற்போது மக்களிடம் சக்தியில்லை. நிறைய நபர்கள் வேலையின்மை மற்றும் வறுமையின் காரணமாக பெரும்பான்மையான மக்கள் முன்வருவதில்லை. ஆகவே அளவுக்கு அதிகமாக காய்கறிகள் சேர்வதால் இருப்பில் வைக்காமல் உடனுக்குடன் விற்று வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர். சாம்பார் வெங்காயத்தைத் தவிர மற்ற அனைத்து காய்கறிகளின் விலையும் ரூ 30க்கு கீழ் விற்கப்படுவதாகவும், பெரும்பாலான காய்கறிகள் கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |