Categories
உலக செய்திகள்

ஊரடங்கால் வாடிய காதல், சிட்டாய் பறந்த காதலன் – சிறையில் அடைபட்ட துயரம் …!!

கொரோனா தொற்று அச்சத்தால் தனிமைப்படுத்தப்பட்ட வாலிபர் காதலியைத் பார்க்க வெளியே சுற்றியதால் ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்

கொரோனா பரவலைத் தடுக்க பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்ப்படுத்தப்பட்ட நிலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தொற்றின் வீரியத்தை அறியாத பலர் ஊரடங்கை மீறி செயல்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக பல நாடுகள் ஊரடங்கை மீறுபவர்களுக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதித்து வருகின்றன. அவ்வகையில் ஆஸ்திரேலியாவிலும் ஊரடங்கை மீறினால் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும் என அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் மேற்கு ஆஸ்திரேலியா மாகாணத்தின் தலைநகரான பெர்த்தில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் ஏராளமானோர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட ஜோனாதன் டேவிட் என்பவர் போலீசார் மற்றும் சுகாதார ஊழியர் கண்களில் மண்ணைத் தூவி வெளியில் வந்து சுற்றி உள்ளார். ஆனால் செல்லும் வழியில் ஊரடங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரிடம் சிக்கி ஊரடங்கை மீறியதாக அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி உள்ளனர்.

அப்போது உணவு வாங்குவதற்காக ஊரடங்கு சட்டத்தை மீறியதாக நீதிபதியிடம் கூறியுள்ளார் வாலிபர். எனவே நீதிபதி தண்டனை எதுவும் வழங்காமல் எச்சரித்து அனுப்பி உள்ளார். பின்னர் மீண்டும் சில மணி நேரத்தில் ஜோனாதன் டேவிட் ஹோட்டலில் இருந்து வெளியேறி சுற்றி உள்ளார் எனவே அவரை மீண்டும் காவல்துறையினர் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதியிடம் அவர் தன் காதலியைப் பார்ப்பதற்காக ஹோட்டலில் இருந்து வெளியே வந்ததாக கூறியுள்ளார் இதனைத்தொடர்ந்து அவருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

Categories

Tech |