Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் வீட்டிற்குள் தஞ்சம்…. சிறுத்தை நடமாட்டமா….? செங்கல்பட்டில் பரபரப்பு….!!

செங்கல்பட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சமூகவலைதளங்களில் வெளியான வீடியோவால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள அஞ்சூர், திருவடிசூலம், அலமேலுமங்காபுரம், வேன்பாக்கம் உள்ளிட்ட ஏரியாக்கள் வனப்பகுதிக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளன. இந்த இடங்களில் கடந்த ஐந்து ஆண்டிற்கும் அதிகமாக சிறுத்தை நடமாட்டம் காணப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து தகவல் தெரிவித்து வந்த வண்ணம் இருந்தனர்.ஆகையால் சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறையினரும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என்பதை கண்காணிப்பதுடன் தானியங்கி கூண்டுகளை அமைத்து அவற்றை பிடிப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

ஆனால் இதுவரையிலும் ஒருமுறைகூட அந்த கூண்டில் சிறுத்தை சிக்கவில்லை. ஆகவே இங்கு சிறுத்தைகள் இல்லை என நினைத்துக் கொண்டு 2018 ஆம் ஆண்டு சிறுத்தையை பிடிக்கும் பணியை வனத்துறையினர் தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். இவ்வாறு இருக்கையில் நேற்று முன்தினம் இரவு அலமேலுமங்காபுரம் அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று அருகில் உள்ள பூங்காவிற்கு செல்லும் முக்கியமான சாலைகளில் சுற்றித் திரிவதற்கான காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

இது சமூக வலைதளங்களில் வெளியாகி அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். பின் வனச்சரக அதிகாரிகள் அதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கையில், அது சிறுத்தை அல்ல காட்டுப்பூனை தான் என்றும், இது போல் தேவையில்லாமல் மக்களை அச்சபடுத்துவோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்து சென்றனர்.

Categories

Tech |