இந்தியாவில் 24 பேரின் மாதிரிகளை ஆய்வு செய்ததில் சராசரியாக ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்த சுகாதாரத்துறை இணை செயலாளர் லால் அகர்வால், ஜப்பானில் 12 பேரின் மாதிரிகளில் ஒருவர்க்கு தொற்று உறுதியாவதாகவும் விளக்கியிருக்கிறார். அமெரிக்காவை பொருத்த வரை 5 மாதிரிகளில் ஒருவருக்கு கோவிட் -19 இருப்பது நிரூபணமாகியுள்ளது.
நோய் பரவலை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளால், கொரோனா தாக்கம் இந்தியாவில் 3 சதவீதமாக கட்டுப்படுத்த பட்டிருக்கிறது என்று லால் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 13,430 ஆக அதிகரித்துள்ளது. 448 பேரும் தொற்று காரணமாக உயிரிழந்திருக்கின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் கணிசமாக அதிகரித்து வருகிறது.