Categories
சற்றுமுன் சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சேலத்தில் 7 பேர் குணமடைந்துள்ளனர் – முதல்வர் பழனிசாமி

சேலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 7 பேர் குணமடைந்துள்ளனர் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சேலத்தில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்படும் அதற்க்கு ஏற்ப சேலம் மாவட்டத்தில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவிய ஒன்பது இடங்கள் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ரூபாய் 1000 நிவாரணத்தொகை குடும்ப அட்டைதாரர்கள் 98 % பேருக்கு வழங்கப்பட்டுவிட்டது. சேலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 24 பேரில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் எந்தெந்த தொழிற்சாலைகள் இயக்கலாம் என்பது திங்கட்கிழமை அறிவிக்கப்படும். 1.25 லட்சம் ரேபிட் டெஸ்ட் பரிசோதனை கருவிகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள்ளது. இதில் 24 ஆயிரம் கருவிகள் வந்து விட்டன என்று முதல்வர் தெரிவித்தார்.

Categories

Tech |