சேலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 7 பேர் குணமடைந்துள்ளனர் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு தகவல்களை தெரிவித்தார். அதில்,
சேலத்தில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்படுவதற்கு ஏற்ப சேலம் மாவட்டத்தில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவிய ஒன்பது இடங்கள் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் எந்தெந்த தொழிற்சாலைகள் இயக்கலாம் என்பது திங்கட்கிழமை அறிவிக்கப்படும். விவசாய வேளாண் பொருட்களை எடுத்துச் செல்லும் விவசாயிகளை தடுக்க கூடாது.வேளாண் பொருட்களை அவர்கள் எடுத்துச் செல்லலாம் என்று முதல்வர் தெரிவித்தார்.