Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தலைவாழை இலையில்… 50 பேர் கூடி அரங்கேற்றிய மெகா கறி விருந்து… சிறிய தவறால் சிக்கிய சோகம்!

கும்பகோணத்தில் ஊரடங்கை மீறி கிடா விருந்து சாப்பிட்ட 50 பேரில் பேஸ்புக்கில் லைவ் செய்த இளைஞரை போலீசார் கைது செய்த நிலையில் மீதமுள்ளவர்களை தேடி வருகின்றனர்..

இந்தியா முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காரணமாக மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.. ஆனால் அதனையும் மீறி தேவையின்றி ஊர் சுற்றி வருபவர்களை போலீசார் மடக்கி பிடித்து வாகனங்கள் பறிமுதல், அபராதம், வழக்குப்பதிவு, கைது என சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கிராமம்

 

மேலும் சிலர் காட்டுப்பகுதியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஓன்று கூடி விளையாடுவதை போலீசார் ட்ரோன் மூலம் விரட்டி கண்காணித்து நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.. இந்த நிலையில்  தஞ்சாவூர் மாவட்டத்தில் தானாக ஒரு இளைஞர் கூட்டம் சிக்கியுள்ளது.. ஆம், கும்பகோணம் அருகே இருக்கும் தியாக சமுத்திரம் பகுதியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காட்டுப்பகுதியில் ஓன்றுகூடி கிடா வெட்டி சமைத்து தலைவாழை இலை விரித்து வரிசையாக எதிரெதிரே அமர்ந்து உட்கார்ந்து விருந்து சாப்பிட்டுள்ளனர்.

கொரோனா ஊரடங்கை கடைப்பிடிக்காத இளைஞர்கள்

இவர்கள் சைலண்டாக சாப்பிட்டு சென்றால் கூட யாருக்கும் தெரிந்திருக்காது.. ஆனால் இதனை ஒருவர் ஃபேஸ்புக்  பக்கத்தில்  லைவ் செய்துள்ளார். இதுதான் அவர்களுக்கு ஆப்பாக மாறி விட்டது.. இதையடுத்து லைவ் செய்தசிவகுரு என்ற இளைஞரை கைது செய்த காவல்துறையினர், விருந்து சாப்பிட்ட சிறுவர் முதல் இளைஞர் வரை அனைவரையும் தேடி வருகின்றனர்.

Categories

Tech |