Categories
உலக செய்திகள்

அச்சமின்றி தெளிவாக கொரோனோவை எதிர்கொள்ளும் உலக பெண் தலைவர்கள்…!!

கொரோனா வைரஸிற்கு வல்லரசு நாடுகளே  மிரண்டு போய் இருக்கும் நிலையில்  அதிரடி நடவடிக்கைகளை பெண் தலைவர்கள் எடுத்துள்ளனர்.

ஆனால் பெண்களை பிரதமராக கொண்ட நாடுகள் துணிச்சலான முடிவுகளால் கட்டுக்குள் வைத்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா வைரசை ஆரம்பத்தில் புரளி என்றார். ஆராய்ச்சியாளர்களின் எச்சரிக்கைகளையும் அலட்சியப் படுத்தினார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனோவை அலட்சியமாகவே கருதினார். அவர் கொரோனோவால் பாதிக்கப்படுவதற்கு முன்புவரை நோயாளிகளுக்கு கை கொடுப்பதை நிறுத்த முடியாது என்று கூறினார்.

இப்படி அறிவியலை அலட்சியப்படுத்திய தலைவர்களுக்கு மத்தியில் அதிரடி உத்தரவுகளால் அதனை மிகவும் சாதுர்யமாக கையாண்டு வருகின்றனர் பெண் தலைவர்கள். சீனாவில் வைரஸ் குறித்து தகவல் வந்த அடுத்த நாளிலேயே தைவான் வரும் சீன விமானங்களுக்கு தடை விதித்தார்  அந்நாட்டு பிரதமர் தைங்யுவன். தற்போது தைவானில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400 க்கும் உள்ளது. தங்கள் நாட்டு தேவைக்கு போக ஐரோப்பிய நாடுகளுக்கு முகக் கவசங்கள் ஏற்றுமதி செய்து வருகிறது தைவான்.

சுற்றுலாத்துறையை பெரிதும் நம்பியுள்ள நியூசிலாந்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நுழைய ஆரம்பத்திலேயே தடை விதித்தார் அந்நாட்டு பெண் பிரதமர் ஜெசிந்தா ஆர்தன்.  அவரது இந்த அதிரடி நடவடிக்கையே, ஒரு மாதமாகியும் அங்கு அதிகளவில் கொரோனா பரவாமல் இருக்க காரணமாக கூறப்படுகிறது. இதேபோல் நார்டிக் நாடு எனப்படும் பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே உள்ளிட்ட நாடுகளை பெண் தலைவர்கள் ஆள்கிறார்கள்.

கொரோனோவின் வீரியத்தைப் புரிந்து கொண்டு முன்கூட்டியே நடவடிக்கைகளை எடுத்ததால் அவர்கள் பெருமளவு கட்டுப் படுத்தி உள்ளனர். இக்கட்டான சூழலில் பதட்டமின்றி தீர்க்கமான முடிவுகளை பெண் தலைவர்களை எடுத்துள்ளனர் என்பதற்கு ஆதாரங்கள் இவை. உலகில் முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்தில் வெறும் 25 சதவீத பெண்களே உள்ளனர். உலகையும், உலக மக்களையும் காக்க ஆண்-பெண் பேதமற்ற பாலின சமத்துவம் தேவை என்பதையே கொரோனா உணர்த்துவதாகவும் உள்ளது.

Categories

Tech |