Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மீனவர்கள்..!!

ஊரடங்கு உத்தரவால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து மீனவர்கள் தவிக்கின்றனர்.

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக ஏற்கனவே மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இழப்பை சந்தித்து வரும் நிலையில், தற்போது மீன்பிடி தடைக்காலமும் அமல்படுத்தப்பட்டுள்ளதால் சுமார் பத்து லட்சம் மீனவர்கள் வேலை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.  இதுதொடர்பாக செங்கல்பட்டு மாவட்டம் கடலோரப் பகுதியான கானத்தூர், ரெட்டி குப்பம் மீனவர்கள் கூறுவதாவது;

கொரோனா வைரஸினால் ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ளதால், மீனவர் சமுதாயம் மிகுந்த வருத்தற்குரிய விஷியமாக உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பாலவாக்கத்தில் இருந்து தொடங்கி கல்பாக்கம் வரையில் இருக்கக்கூடிய மீனவ சமுதாயம் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. மொத்தம் 44 கிராமங்கள் இங்கே உள்ளது. அரசாங்கம் அறிவிக்கின்ற போதுமான நிவாரண நிதி இல்லை என்று கூறுகிறார்கள்.

இங்க இருக்க கூடிய மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள். இந்த பகுதியில் ஊராட்சிகளும் ஏதும் செய்யவில்லை, அரசு அதிகாரிகளும் வந்து பார்க்கவில்லை என்றும் ஒரு நிவாரணப் பொருட்களும் கிடைக்கவில்லை என்றும், சுகாதாரத்துறை  கிருமிநாசினி கூட தெளிக்கவில்லை என்பது ஒரு குற்றச்சாட்டாக இருக்கிறது.  அரசு உடனடியாக  மீனவர்களின் கோரிக்கைகளை ஏற்கவேண்டும் என்று கூறியுள்ளனர்.

 

Categories

Tech |