Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

நாளைய( 18.04.2020 ) நாள் எப்படி இருக்கும்.? ராசிபலன் இதோ..!!

 

18.04.2020,சித்திரை 5,சனிக்கிழமை.

இராகு காலம் – காலை 09.00-10.30
எம கண்டம் மதியம் 01.30-03.00
குளிகன் காலை 06.00-07.30.

நாளைய  ராசிப்பலன் –  18-04-2020

 

மேஷம்

இன்று உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும் இந்தநாள் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் செயல்படுவார்கள் அனைத்தையும் நன்மை கிடைக்கும் சேமிப்பு உயரும் பூர்வீக சொத்துகளால் நல்ல பலன்கள் உண்டாகும்.

ரிஷபம்

இன்று மகிழ்ச்சியான செய்திகள் வீடு தேடி வரும்.வேலையில் எதிர்பார்த்த பணி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. பிள்ளைகள் அன்பாக நடந்து கொள்வார்கள். பணவரவு லாபகரமாக இருக்கும். தொழில் தொடர்பாக அரசு வழியில் உதவிகள் கிடைக்கும் பொன் பொருள் சேரும்.

மிதுனம்

குடும்பத்தில் இன்று தேவையில்லாத பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் நண்பர்களின் ஆலோசனைகள் மூலம் முன்னேற்றம் காண இயலும். சகோதரர்களிடம் வீண் வாக்குவாதம் வேண்டாம். எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.

கடகம்

இன்று தேவையில்லாத மன கஷ்டங்களை உண்டாகலாம். சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் நேரிடும். சுபநிகழ்ச்சிகளை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. அறிமுகம் இல்லாதவர்களிடம் பேச்சு வார்த்தை தவிர்ப்பது நல்லது.

சிம்மம்

உடன்பிறந்தவர்களால் நன்மை உண்டாகும். உபயோகத்தில் வேலைக்கேற்ற ஊதியம் கிடைக்கும். நண்பர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து நல்லுறவை பேணுவீர்கள். நண்பர்களால் மனமகிழ்ச்சி உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

கன்னி

குடும்பத்தில் இன்று ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். நன்கு சிந்தித்து செயற்படுவதன் மூலம் தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். உறவினர்களால் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.சகஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

துலாம்

குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை உண்டாகும்.விலைஉயர்ந்த பொருட்களை வாங்குவதில் சற்று கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை குறையும். உறவினர்களை அனுசரித்து செல்வது நன்மை. வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றி கிட்டும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

விருச்சிகம்

இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும்.பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.உத்தியோகத்தில் சிலருக்கு உழைப்புக்கேற்ற சன்மானம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் தொடர்பான பயணங்களால் அதிக லாபம் கிடைக்கும்.

தனுசு

இன்று அனைத்து செயல்களிலும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். தொழிலில் உங்கள் திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.புதிய தொழில் தொடங்குவதில் நல்ல முடிவுகள் கிடைக்கும்.ஆடை,அணிகலன்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

மகரம்

இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகலாம். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும். சுப நிகழ்ச்சிகளால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

கும்பம்

இன்று வியாபாரம் அமோகமாக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.பயணங்களால் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

மீனம்

வியாபாரத்தில் இன்று எதிர்பாராத செலவுகள் உண்டாகும். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க வாய்ப்புண்டு.சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும்.உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.நெருங்கிய நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

Categories

Tech |