ஊரடங்கு இன்னும் மூன்று வாரங்களுக்கு தொடரும் என இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் ஊரடங்கு இன்னும் மூன்று வாரங்களுக்கு தொடரும் என்று வெளியுறவு செயலாளர் டோமினிக் ராப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது நடைமுறையில் இருந்து வரும் ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளி நல்ல பலனைக் கொடுத்துள்ளது. இதன்காரணமாக இங்கிலாந்தில் மேலும் மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு தொடரும்.
ஊரடங்கை தளர்த்துவது என்பது இப்போதைய சூழலுக்கு சுகாதாரத்திற்கும் பொருளாதாரத்திற்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் இருக்கும். அதோடு ஊரடங்கு தளர்த்தப் படுவதற்கு முன்னர் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டியது அவசியம் என டோமினிக் ராப் கூறியுள்ளார்.
பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகள்
தினசரி இறப்பு விகிதத்தில் நிலையான வீழ்ச்சி மற்றும் நோய்த்தொற்று குறைந்து வருவதற்கான நம்பகமான புள்ளிவிவரம்.
சோதனைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது பற்றி உறுதி செய்வது எதிர்காலத்தில் ஏற்படும் தேவையை பூர்த்தி செய்யும்.
ஊரடங்கு தளர்த்தப்படுவது எந்த பெரிய ஆபத்தையும் ஏற்படுத்தாது எனும் நம்பிக்கையுடன் இருப்பது.