சீனாவில் மீண்டும் கொரோனா தலைதூக்க தொஙடக்கியுள்ளது அந்நாட்டுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 2,197,174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 147,512 பேர் உயிரிழந்த நிலையில், 557,618 பேர் குணமடைந்துள்ளனர். 1,492,044 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 56,517 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.
கொரோனாவின் தாக்கத்தில் அமெரிக்கா சிக்கி சின்னாபின்னமாகியுள்ளது. அங்கு மட்டும் 678,210 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்ட்டுள்ள நிலையில் 34,641 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் தொடங்கிய இந்த வைரஸை அந்நாட்டு கட்டுப்படுத்தி உள்ளதாக தெரிவித்த சீனா ஊடங்கால் முடக்கி வைத்திருந்த பகுதியில் ஊரடங்கை தளர்த்தியது. அனைத்தும் வழக்கம் போல செயல்பட தொடங்கின. அங்கு மட்டும் கொரோனா பாதித்த 77,892 பேர் குணமடைந்து 3,342 பேர் உயிரிழந்து இருந்தனர்.
மேலும் நேற்று புதிதாக 46 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு 1,107 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 95 பேர் இக்கட்டான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்கள். இந்நிலையில் தீடிர் திருப்பமாக இன்று 351 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்ட்டுள்ளது. அதில் அதிர்ச்சிக்குரிய தகவல் என்னெவென்றால் இன்று புதிதாக 1,290 பேர் உயிரிழந்துள்ளது மீண்டும் கொரோனாவின் கோர பசிக்கு சீனா இரை யாக உள்ளதை உணர்த்துகின்றது.
இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 82,692ஆகவும், 4,632 பேர் உயிரிழந்துள்ளனர். அதே வேளையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 77,944ஆகவும், 116 பேர் சிகிச்சை பெற்று வருவதில் 89 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றார்கள். தீடிரென்று 351 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது சீனாவுக்கு கொரோனா மீண்டும் சிம்மசொப்பனமாக இருக்க போவதை உணர்த்துகின்றது.