Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் 20க்கு பின்…. வேலைக்கு போக மாட்டோம்….. அனுமதியை வாபஸ் வாங்குங்க….. ஊழியர்கள் வேண்டுகோள்…!!

ஏப்ரல் 20 க்கு பின் 50% ஊழியர்களை கொண்டு  அலுவலகங்களை செயல்படுத்தலாம் என அரசு அளித்த அனுமதியை திரும்பப் பெற வேண்டுமென்று பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஏப்ரல் இருபதாம் தேதிக்குப் பிறகு கட்டுப்பாடுகளை தளர்த்த இருப்பதால் IT மற்றும் அதை சார்ந்த தொழில் நிறுவனங்கள் 50% ஊழியர்களை வைத்து அலுவலகத்தை இயக்கலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதற்கு ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தகவல் தொழில்நுட்ப நிறுவன பணியாளர்கள் அனைவருக்கும் பொது போக்குவரத்து ஏற்படுத்தி தரப்பட வேண்டும். ஏனெனில் கிட்டத்தட்ட 80% ஊழியர்கள் பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்தி வந்தனர். அதன்படி, பார்க்கையில் ஏப்ரல் 20 க்கு பிறகு போக்குவரத்து வசதி இல்லாமல் எங்களால் பணிக்கு வர இயலாது. ஆகவே அரசு அளித்த இந்த அனுமதியை அரசே திரும்பப் பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Categories

Tech |