நடிகர் விஜயின் மகன் வெளிநாட்டில் சிக்கித் தவிப்பதை அறிந்த அஜித் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு விபரங்களை கேட்டறிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் விஜய் மிகுந்த மனவேதனையில் இருப்பதாகவும் அவரது மகன் வெளிநாட்டில் சிக்கித் தவிப்பதால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் பல்வேறு செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. அதன்படி பார்க்கையில்,
கனடாவில் தங்கியுள்ள நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் பற்றி நடிகர் அஜித் போனில் நலம் விசாரித்துள்ளார். படிப்பதற்காக கனடா சென்ற சஞ்சய் கொரோனா காரணமாக நாடு திரும்ப முடியவில்லை. இது குறித்து அறிந்த அஜித் விஜயை தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இந்த செய்தியை கேட்ட அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவர்கள் இருவரது நட்பை பாராட்டி நல்ல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.