துளசியின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.
பொதுவாக எந்த ஒரு நோயாக இருந்தாலும் சரி அதை எதிர்த்துப் போராடுவதற்காக இயற்கையாகவே நமது உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் அமைந்துள்ளது. அவற்றை துரிதமாக செயல்பட வைக்க, துளசி பயன்படுகிறது. துளசியில் ஆண்ட்டி வைரஸ் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. எனவே தினமும் ஐந்து துளசி இலைகளுடன் மூன்றிலிருந்து நான்கு மிளகு சேர்த்து ஒரு டீஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.