Categories
அரசியல்

மீண்டும் உயர்ந்த பாதிப்பு…. தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அசுர வேகத்தில் பரவி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக குறைவான பாதிப்பு மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வதால் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக இருக்கிறது.

அதை தொடர்ந்து நேற்று முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 1,242 ல் இருந்து 1,267 ஆக அதிகரித்துள்ளது என்றார். மேலும் நற்செய்தியாக இன்று (நேற்று) ஒரேநாளில் 62 பேர் குணமடைந்தனர் என்றார். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 118ல் இருந்து 180 ஆக அதிகரித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,267 ல் இருந்து 1,323 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரேநாளில் 103 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும், உயிரிழப்பு 15 ஆக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 180ல் இருந்து 283  ஆக அதிகரித்துள்ளது.. இந்த செய்தி மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.. கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது..

 

Categories

Tech |