மகாராஷ்டிராவில் ஊரடங்கை மீறிய சுமார் 200 பேருக்கு காவல்துறையினர் நூதன தண்டனை வழங்கினர்.
இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஏப்ரல் 14 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட ஊரடங்கு மே மூன்றாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.. அதன்படி அத்தியாவசிய தேவையின்றி யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சிலர் ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியே சுற்றித் திரிகின்றனர். இதனை தடுக்கும் விதமாக போலீசார் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தும், நூதன தண்டனையும் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஊரடங்கு கட்டுப்பாட்டை மதிக்காமல் சாலையில் வாகன ஓட்டிகள் மற்றும் மக்களின் நடமாட்டம் நேற்று அதிகமாக இருந்துள்ளது. இதையடுத்து இன்று சுமார் 200 பேரை மடக்கி பிடித்த போலீசார் சாலையில் தொடர்ந்து 4 மணி நேரத்திற்கும் அதிகமாக சமூகஇடைவெளி விட்டு அமர வைத்து நூதன தண்டனை வழங்கினர். இந்தியாவில் கொரோனா பாதித்த மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..