கோடை வெயில் காலம் தொடங்க உள்ள இந்த சூழ்நிலையில் வீட்டை எப்படி குளுமையாக வைப்பது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
வெயில் காலம் தொடங்கிவிட்டது. பெரும்பான்மையான வீடுகளின் மொட்டை மாடிகளில் இருந்து வெயிலானது நேரடியாக வீட்டிற்குள் இறங்கும். ஏசி இருப்போர் வீட்டில் பிரச்சனை இல்லை. ஆனால் ஏசி இல்லாத வீட்டில் காற்றில் உள்ள வெப்பம் எரிச்சலடையச் செய்யும்.
வீடு முழுவதும் குளிர்ச்சியாக வைக்க செடிகள் வளர்ப்பது மாடித்தோட்டம் அமைப்பது மிக முக்கியமானது மாடியில் செடி வளர்ப்பதன் மூலம் நேரடியாக சூரிய ஒளி சீலிங் மீது படாது. இதன் காரணமாக வெட்கை வீட்டிற்குள் இறங்காது. மேலும் இளநிற பெயிண்ட் அடிப்பது மூலமாகவும் வீட்டை குளுமையாக வைக்க உதவும்.