நீரும் ஒருவகை உணவு தான் என்று ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்
கொரோனா பாதிப்பால் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் இந்த சூழ்நிலையில் அவர்களது அச்சம் தவிர்க்கவும், உடல்நிலையை பராமரிப்பதற்காக ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திரபாபு தொடர்ந்து உடல் ஆரோக்கியம் குறித்த தகவல்களை வழங்கி வருகிறார். அந்த வகையில் தற்போது நாம் தண்ணீர் குடிக்க வேண்டிய அவசியம் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் நீரும் உணவு தான் அதை தினமும் எட்டு முறை பருக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.