தமிழகத்தில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் வேகமாக பரவி வந்த கொரோனா வைரஸ் கடந்த 3 நாட்களாக தினமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 40 க்கும் கீழ் என்ற எண்ணிக்கையில் இருந்தது. இதனால் தமிழகத்தில் கொரோனா கட்டத்துக்கு வந்து விடும் என்றெல்லாம் செய்திகள் எழுந்தன. தமிழக முதல்வர் கூட நிலைமை விரைவில் சரியாகும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் இன்று ஒரே நாளில் புதிதாக 55 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் 1267லிருந்த கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1323ஆக உயர்ந்துள்ளது.
இன்று புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டதில் தஞ்சை 17, சென்னை 11 என்ற விகிதத்தில் இருக்கின்றது. கொரோனா பாதித்த 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில் கொரோனாவில் குணமடைந்தவர்களை தவிர்த்து 1040 சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஒருபுறம் கொரோனா பாதித்தவர்கள் இன்று அதிகரித்தது மக்களுக்கு வேதனையை அளித்து இருந்தாலும், மறுபுறம் குணமடைந்த அவர்களின் எண்ணிக்கை 283ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 100க்கும் அதிகமானோர் குணமடைந்தது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா சிகிச்சை பெற்று வந்த 103 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 283ஆக உயர்ந்துள்ளது இந்தியாவிலே தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலில் மகாராஷ்டிராவில் 300 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.