Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொத்தாக கிளம்பிய தமிழகம்….. கெத்தாக நிற்கிறது…. அசத்திய மருத்துவர்கள் …!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 103 பேர்  கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு 40க்கும் கீழாக தினமும் கொரோனா பாதிப்பு உறுதியாகி வந்தது. இன்று தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,323ஆக உயர்ந்துள்ளது. 3 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 50-ஐ கடந்துள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள இந்த தகவலின் படி 78,349 பேர் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு முடித்தவர்களாக உள்ளார். அதே போல தமிழகத்தில் 29,673 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்து உயிரிழந்தவரின் எண்ணிக்கை 15ஆக இருந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 103 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 283ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 103 பேர் கொத்தாக குணமடைந்து வீடு திரும்பியதால் 283 பேர் குணமடைந்து இந்தியளவில் கெத்தாக 2ஆவது இடத்தில் தமிழகம் நிற்கிறது. அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 300 பேர் குணமடைந்து முதலிடத்திலும், 255 பேர் குணமடைந்து கேரளா 3ஆவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் மருத்துவதுறையை பலரும் பாராட்டும் வகையில் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களும் விரைவில் குணமடைய வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

Categories

Tech |