தனுசு ராசி அன்பர்களே….இன்று தங்கள் பொருட்களை கவனமுடன் பாதுகாக்க வேண்டும்.இன்று எப்போதும் எச்சரிக்கையாக தான் இருக்க வேண்டும்.அவர்களுக்கு தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் கொஞ்சம் சந்தேகம்தான்.தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் லாபம் இல்லாத,ஆதாயம் இல்லாத வேலைகளைத்தான் செய்யவேண்டியிருக்கும்.
உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு ஓயாத உழைப்பும் குறைவான பலனும் ஏற்படும்.வாழ்க்கைத்துணையின் உடல்நலம் பாதிக்கப் படுவதுடன் மருத்துவ செலவும் அதிகரிக்கும்.கணவன் மனைவிக்கு இடையே கருத்துவேற்றுமை ஏற்படலாம். அனைவரையும் அனுசரித்து செல்வது ரொம்ப நல்லது.
பிள்ளைகளால் பெருமை சேரும் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
அது போலவே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுங்கள்.உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பாக இருக்கலாம்.
அதிர்ஷ்ட திசை: வட மேற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்