கும்ப ராசி அன்பர்களே…இன்று தனவரவு ஏற்பட்டு மகிழும் நாளாகவே அமையும்.புதிய பதவிகள் வாகனம் வசதி வாய்ப்புகள் என எல்லா விதத்திலும் முன்னேற்றம் அடையும்.வாய்க்கு ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள்.மனதைரியம் இன்று பிறக்கும் எல்லா காரியங்களிலும் சாதகமாகவே முடியும்.எல்லா இடங்களிலும் மரியாதையும் கௌரவமும் அதிகரிக்கும்.
அனைத்து தரப்பினரிடமும் இருந்து ஆதரவும் கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள்.தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும்,போட்டிகள் குறையும். தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும்.மற்றவர்களிடம் பேசும்போது மட்டும் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம்.இன்று காதல் வயப்பட கூடிய சூழல் உருவாகும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுங்கள்.உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்