Categories
அரசியல்

தேர்தல் அறிக்கை மற்றும் தொகுதி பங்கீட்டு குழுவுடன் ஸ்டாலின் ஆலோசனை……நாளை வெளியாகும் திமுக வேட்பாளர் பட்டியல்…!!

திமுக தேர்தல் அறிக்கை குழு மற்றும் தொகுதி பங்கீட்டு குழுவுடன் திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது . இதனைத் தொடர்ந்து திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு மற்றும் தொகுதி பங்கீட்டு குழுவுடன் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார் . அதில் திமுக சார்பில் போட்டியிடும் 20 மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் குறித்தும் 18 சட்டப்பேரவை இடைத் தேர்தல் பெயரில் சட்டப்பேரவை இடைத் தேர்தல் வேட்பாளர்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

நாளைய தினம் திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் நிலையில் இறுதி கட்டமாக இந்தக் ஆலோசனை நடைபெற்றது . ஏற்கனவே பெரும்பாலான தொகுதிகளுக்கு திமுக வேட்பாளர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த ஆலோசனை மூலம் புதிய வேட்பாளர் தேர்ந்து எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது . இதனை தொடர்ந்து திமுக_வின் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு நாளை மாலை 6.30  மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது .

Categories

Tech |