Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 14ஆயிரத்தை தாண்டியது ….!!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14ஆயிரத்தை தாண்டியுள்ளது நாட்டு மக்களை அச்சம் அடைய வைத்துள்ளது.

வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் மத்திய சுகாதாரத் துறை கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை வெளியிடும் போதெல்லாம் உயிரிழப்புகளும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

இன்று மத்திய சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்து வெளியிட்ட தகவலில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதில் கடந்த 24 நேரத்தில் 991 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,835 லிருந்து 14,378ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 452 லிருந்து 480ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1767லிருந்து 1992 ஆக அதிகரிப்பு என்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Categories

Tech |