செங்கல்பட்டில் தர்பூசணி மற்றும் நெல் மூட்டைகளை அரசே கொள்முதல் செய்ய வேண்டுமென திமுக MP வலியுறுத்தியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரை திமுகவின் MP மற்றும் எம்எல்ஏக்கள் நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் தர்ப்பூசணி பயிரிடப்பட்டு அவை நல்ல விளைச்சலைக் கொடுத்துள்ளது.
தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள தர்பூசணிப் பழத்தை வியாபாரிகள் யாரும் ஊரடங்கு உத்தரவை காரணம் காட்டி வாங்க முன்வருவதில்லை. ஆகையால் தர்பூசணி பழங்களை அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், அதே போல் அங்குள்ள உள்ள நெல் நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் பல நாட்களாக தேக்கி வைக்கப்பட்டு உள்ளன.
அதையும் அரசு கொள்முதல் செய்து அரசு குடோனுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதே மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் சார்பாக நிவாரண உதவிகளை வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.