Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

144…. கருகிய பூக்கள்…. ஏக்கருக்கு ரூ40,000 நஷ்டம்…. வேதனையில் விவசாயிகள்…!!

தர்மபுரியில் நல்ல விலைக்கு போக வேண்டிய சம்பங்கி பூக்கள் அறுவடை செய்ய முடியாமல் கருகி நாசமாவதாக  விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் குண்டுமல்லி, சம்பங்கி உள்ளிட்ட பூக்களின் விளைச்சல் கோடைகாலங்களில் அமோகமாக இருக்கும். அறுவடை செய்யப்படும் பூக்கள் பெங்களூர் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தமிழகத்தின் முக்கிய பூ மார்க்கெட் பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

ஆனால் தற்போது 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் அறுவடை பூக்கள் அறுவடை செய்யப்பட்டாலும் அதை வாங்குவதற்கோ  அல்லது பறிக்கக்கூடிய கூலியாட்கள் வருவதில்லை. இதன் காரணமாக பூக்கள் செடியிலேயே கருகி நாசம் ஆகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுவாக இந்த பூக்கள் அறுவடை செய்யப்பட்டால் ஏக்கருக்கு ரூபாய் 40 ஆயிரம் வரை லாபம் ஈட்டும் ஆனால் தற்போது லாபத்திற்கேற்ற நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆகையால் நஷ்டத்தைத் தவிர்க்கும் பொருட்டு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூபாய் 20 ஆயிரம் நிவாரண தொகை அரசு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Categories

Tech |