Categories
தேசிய செய்திகள்

BREAKING : கொரோனாவுக்கு இந்தியாவில் முதல் காவல் அதிகாரி பலி..!

கொரோனாவுக்கு இந்தியாவில் முதல் காவல் அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவல் உதவி ஆணையர் அனில் கோலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் தொழில்நுட்பத் துறை தற்போது தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அனில் கோலியின் குடும்பத்தினர் மற்றும் அவருடன் பணிபுரிந்த மற்ற காவல்துறையைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

பஞ்சாப் மாநிலத்தைப் பொருத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக தான் இருக்கிறது. அங்கு  202 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பலி  எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. ஆம், அங்கு 13 பேர் இதுவரை பலியானநிலையில், தற்போது இவருடன் சேர்ந்து 14  ஆக உயர்ந்திருக்கிறது.. ஏற்கனவே இந்தியாவில் மருத்துவர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், காவல் துறை அதிகாரி ஒருவர் இறந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

Categories

Tech |