Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரூ50,00,00,000….. மூட்டைகள் தேக்கம்….. நடவடிக்கை எடுங்க…. தோட்ட உரிமையாளர்கள் கோரிக்கை….!!

திண்டுக்கல்லில் ரூபாய் 50 கோடி மதிப்பிலான மிளகு  மூட்டைகள் சேமிப்பில் உள்ளதாகவும் அவற்றை விற்பனைக்கு அனுப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தோட்ட உரிமையாளர்கள்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கீழ் மலைப்பகுதிகளில் மிளகு, சவ்சவ், காபி கொட்டை உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றனர்.  இந்த பயிர்களை வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி உள்ளிட்ட கொடைக்கானலை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து மக்கள் நால்வரும் வேலைக்கு வருகின்றனர்.

அவர்கள் அறுவடை செய்யும் மிளகு உள்ளிட்ட விளைபொருட்கள் மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மார்க்கெட் பகுதிகளுக்கும், கேரளாவுக்கும் அனுப்பிவைப்பர். தற்போது 144 தடை உத்தரவு காரணமாக மலைப் பாதை மூடப்பட்டு உள்ளதால், அறுவடை செய்யப்பட்ட விளைபொருட்களை விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் கூறுகையில், குடும்ப உறுப்பினர்களை வைத்து நிலங்களைப் பறித்து குடோனில் சேமித்து வைத்துள்ளனர். இதுவரை ரூபாய் 50 கோடி மதிப்பிலான மிளகு தேக்கம் அடைந்துள்ளதாகவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வாழ்வாதாரம் மீண்டெழ முடியாத அளவிற்கு பாதிக்கப்படும் என்றும் வேதனை தெரிவிக்கின்றனர். 

Categories

Tech |