மணத்தக்காளியின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
மணத்தக்காளி மிகுந்த மருத்துவ குணம் கொண்ட ஒரு கீரை. இதன் இலையிலிருந்து சாரை பிழிந்து எடுத்து அதில் சிறிதளவு இந்துப்பு போட்டு வாரம் இருமுறை குடித்து வர கீழ் வாயு மற்றும் சிறுநீர் தடை நீங்கும்.
மேலும் இந்த இலையை நன்கு வெயிலில் காய வைத்து பின் வெந்நீரில் ஊற வைத்தும் சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிட்டு வருவதன் மூலம் கல்லீரல் மண்ணீரலில் உள்ள வீக்கம் குறையும். மார்பு வலியும், சளியும் நீங்கும். இந்த மணத்தக்காளி கீரையை வீட்டருகில் உள்ள சிறிய இடங்களில் புதைத்தாலே நன்றாக வளர கூடியவை.