19.04.2020,சித்திரை 6,ஞாயிற்றுக்கிழமை .
இராகு காலம் – மாலை 04.30 – 06.00
எம கண்டம் – பகல் 12.00 – 01.30
குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30
நாளைய ராசிபலன் –19.04.2020
மேஷம்
உங்களுக்கு இன்று பணவரவு தாராளமாக இருக்கும் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் செல்ல நேரிடும். உறவினர்கள் வழியில் நல்ல செய்திகள் வரும்,செலவுகள் குறையும்.குடும்பத்தில் இருந்து வந்த கருத்து கருத்துவேறுபாடுகள் நீங்கும்.நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
ரிஷபம்
இன்று பிள்ளைகள் வழியாக நற்செய்திகள் வந்து சேரும்.உங்கள் அறிவு திறமையால் வியாபாரத்தில் வளர்ச்சி அடைய வாய்ப்புண்டு.குடும்பத்தில் உள்ளவர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்கும்.உறவினர்கள் வகையில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.
மிதுனம்
இன்று வியாபாரத்தில் சக ஊழியர்களால் தேவையற்ற பிரச்சனைகள் வரக்கூடும். சிக்கனமாக செயல்படுவதால் பிரச்சனை குறையும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். எதையும் செய்வதற்கு முன் சிந்தித்து செயல்படுவது நன்று.
கடகம்
இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் அதிகமாக பேசுவதை தவிர்க்கவும்.பெரியவர்களின் அதிருப்திக்கு உள்ளாவீர்கள். தொலைதூர பயணங்களையும்,புதிய வேலை முயற்சிகளையும் தள்ளி வைப்பது நல்லது.
சிம்மம்
உங்கள் மனதில் இன்று நல்ல மாற்றங்கள் உண்டாகும்.சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் வந்து சேரும்.உறவினர்களால் நற்செய்தி வந்து சேரும்.உடன்பிறந்தவர்கள் இன்று உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். திருமணம் தொடர்பான முயற்சிகள் தொடங்க நல்ல நாளாகும்.பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.
கன்னி
இன்று நீங்கள் செய்யும் காயங்களுக்கு சிறிது காலதாமதம் ஏற்படும்.பிள்ளைகள் வழியாக சிறு கஷ்டங்கள் உண்டாகும்.வியாபாரம் தொடர்பாக புதிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். சுபகாரிய நிகழ்ச்சிகளில் தடங்கல் உண்டாகும்.உதவியாக இருப்பார்கள்
துலாம்
இன்று வியாபாரம் சற்று மந்தமான நிலையில் இருக்கும்.தொலைதூரப் பயணங்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். புதிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.பழைய பாக்கிகள் வசூலாகும்.தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் வியக்கவைக்கும் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.சிலருக்கு பொன் பொருள்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வீர்கள்.பணவரவு மிகச் சிறப்பாக இருக்கும்.உறவினர்களால் நன்மை உண்டு.வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும்.
தனுசு
குடும்பத்தில் இன்று பிள்ளைகள் வழியாக சுபச் செலவுகள் உண்டாகும்.உடனிருந்தவர்கள் நன்மை கிடைக்கும்.எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். புதிய முயற்சிகளில் தடைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.
மகரம்
இன்று சகோதர சகோதரிகள் உடன் மனக்கசப்புகள் ஏற்படக்கூடும். பெண்களுக்கு வீட்டில் வேலைச்சுமை அதிகரிக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகலாம். வியாபாரத்தில் மந்த நிலை சற்று குறையும். குடும்ப பிரச்சினைகளுக்கு உறவினர்கள் வழியில் நன்மை கிடைக்கும்.
கும்பம்
உடல் ஆரோக்கியத்தில் மந்தமான நிலை ஏற்படும்.குடும்பத்தில் இருப்பவர்களால் மருத்துவ செலவுகள் உண்டாகலாம். கடன் பிரச்சினைகள் தீரும். எதிர்பார்த்த உதவிகள் சற்று தாமதமாக கிடைக்கும். சுப முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் மிகச்சிறப்பாக இருக்கும்.
மீனம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மன மகிழ்ச்சியுடனும், புத்துணர்ச்சியுடனும் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். புதிய செயல்களை தொடங்க நல்ல நாள் ஆகும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.நவீன பொருட்கள் வாங்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றியை தரும்.