திருச்சியில் காவல்துறை சார்பில் தரப்படும் கலர் அட்டைகளில், ஜூன் 24-ஆம் தேதி வரை அச்சடிக்கப்பட்டு இருப்பதால், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு விடுமோ? என்ற அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் பச்சை, பிங்க், நீலம் உள்ளிட்ட கலர் அட்டைகள் வழங்கி,
அதன்படி பொதுமக்கள் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வாங்க வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும் என்று அறிவுறுத்தி பட்டு வருகிறது. இது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வகையில், திருச்சியில் சோமரசம்பேட்டையில் காவல்துறை அதிகாரிகள் வழங்கிய அட்டையில் ஜூன் 24ம் தேதி வரை அச்சடிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து காவல் துறை சார்பிலும் சரியான விளக்கம் அளிக்கப்படாததால், மே 3 க்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமோ என்ற குழப்பம் அப்பகுதி மக்களிடையே நிலவ ஆரம்பித்து உள்ளது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.