தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்..
தமிழகத்தில் கொரோனா அசுர வேகத்தில் பரவி வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக குறைவான பாதிப்பு மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்ததால் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக இருந்தது. அதை தொடர்ந்து நேற்று தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் மக்கள் அச்சமடைந்தனர்.. இதனால் பாதிப்பு எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 1,267 ல் இருந்து 1,323 ஆக அதிகரித்தது..
இந்த நிலையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பதாக கூறினார். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,323 ல் இருந்து 1,372 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களில் இன்று ஒரேநாளில் 82 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் நற்செய்தியை அவர் கூறினார். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 283ல் இருந்து 365 ஆக அதிகரித்துள்ளது.. இந்த செய்தி மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக இருக்கிறது..