Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் 20ம் தேதி முதல் பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படும் – பதிவுத்துறை தலைவர் அறிவிப்பு!

ஏப்ரல் 20ம் தேதி முதல் பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படும் என பதிவுத்துறை தலைவர் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்., 20ம் தேதி முதல் சில தொழில்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அது குறித்து மாநில அரசுகள் முடிவு எடுத்து கொள்ளலாம், ஆனால் ஊரடங்கு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தி இயல்பு வாழ்க்கை வாழ தமிழக அரசு அனுமதி அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நாளை மறுநாள் முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்பு வாழ்க்கை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் 20ம் தேதி முதல் பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படும் என பதிவுத்துறை தலைவர் அறிவித்துள்ளார். பணிக்கு வரும் ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 1 மணி நேரத்திற்கு 4 டோக்கன் வீதம் நாளொன்றுக்கு 24 டோக்கன்கள் வரை பதிவுசெய்ய அனுமதி அளிக்கபட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை சேர்ந்தவராக இருந்தால் பதிவு பணிகள் செய்யப்படாது என்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அலுவலகம் இயங்கினால் தற்காலிக இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

Categories

Tech |