தலைநகரான சென்னையில் கொரோனா நிலவரம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.
சென்னையில் இதுவரை 228 பேருக்கு உறுதிசெய்யப்பட்டது. குணமடைந்து 24 பேர் வீடு திரும்பிய நிலையில், 196 பேர் சிகிச்சையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 73 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட ஒருவர் குணம் அடைந்துள்ளார். 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் பாலின வாரியாகப் பார்த்தால் ஆண்களில் 68 சதவிகிதமும் பெண்கள் 32 சதவிகிதமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வயது வாரியாக 10 முதல் 29 வயதுக்குள் 50 நபர்களும், 40 முதல் 49 வயதுக்குள் 42 நபர்களும், 50 முதல் 52 வயதுக்குள் 40 நபர்களும், 60 முதல் 69 வயதுக்குள் 24 பேரும், 70 முதல் 90 வயதுக்குள் 14 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.