கொரோனாவை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவுடனான ஒற்றுமையை வெளிப்படுத்த மலை சிகரத்தில் இந்திய தேசியக் கொடியை ஒளிர விடப்பட்டுள்ளது
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி 20 லட்சத்திற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ள நிலையில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளில் அனைத்து நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதே சமயம் நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
கொரோனா அச்சத்தால் பல நாடுகள் முடங்கியுள்ள நிலையில் ஸ்விட்ஸர்லாந்தின் மிக உயர்ந்த சிகரமான மேட்டர்ஹார்ன் மலை சிகரத்தில் கடந்த ஒரு வார காலமாக இரவு நேரங்களில் வண்ண ஒளிகளின் மூலம் வார்த்தைகள், சொற்றொடர்கள், உருவங்கள் போன்றவற்றை ஒளிர விடுகின்றனர். அவ்வகையில் நாட்டின் கொடி, ஒற்றுமை, வீட்டில் இருங்கள், நம்பிக்கை இதுபோன்ற சொற்கள் மலைச்சிகரத்தில் ஒளிர படுகின்றது.
இந்நிலையில் கொரோனாவை எதிர்த்துப் போராடும் இச்சமயத்தில் இந்தியாவுடன் இருக்கும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக ஸ்விட்ஸர்லாந்தின் உயரமான ஆல்ப்ஸ் மலை சிகரத்தில் இந்தியாவின் தேசிய கொடியை ஒளிர விட்டுள்ளனர்.