தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இன்று 82 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்துள்ளது மக்களிடை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. கொரோனா ஒரு கொடூர தொற்று நோய் மற்றும் உலகளவில் இதற்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் அனைவரும் மரண பீதியில் இருந்து வருகின்றனர்.
அதே நேரத்தில் நாடு முழுவதும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து இருந்தது மக்களுக்கு கொரோனாவை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இருந்து வந்தது. இந்தியாவில் 2,080 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து அனைத்து மாநில மக்களையும் உற்சாகபடுத்தியுள்ளது. நேற்று வரை கொரோனாவில் இருந்து அதிகமானவரை குணப்படுத்திய மாநிலமாக மகராஷ்டிரா இருந்து வந்த நிலையில் அதனை தமிழகம் தனதாக்கி கொண்டுள்ளது. மஹாராஷ்டிராவில் 3320 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் 331 பேர் குணமடைந்தனர்.
இன்று ஒரே நாளில் 82 பேரை குணப்படுத்தி வீட்டுக்கு அனுப்பியதன் மூலம் தமிழகத்தில் 365 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா பாதித்த அதிகமானவர்களை குணப்படுத்தியதில் இந்தியளவில் தமிழகம் முதலிடத்தில் இருக்கின்றது. கடந்த இரண்டு நாளில் மட்டும் (நேற்று 103 , இன்று 82) 185 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது பிற மாநிலங்களையும் வியப்படைய வைத்துள்ளது. தமிழக அரசு சுகாதாரத்துறை, தமிழக அரசு கொரோனவை கட்டுப்படுத்த எடுத்துக்கொண்ட நடவடிக்கைதான் இதற்கு காரணம் என்றும் பலரும் தமிழக அரசைப் பாராட்டி வருகின்றனர்.