கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் வடமாநில பெண் தொழிலாளிக்கு ஆண்களே சாலையில் பிரசவம் பார்த்து தாய் மற்றும் சேய் காப்பாற்றிய நிகழ்வு அரங்கேறியுள்ளது.
வாகன வசதி ஏதும் இல்லாமல் பிரசவ வலியுடன் நடந்தே மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணின் பனிக்குடம் உடைந்து குழந்தை தலை வெளியேறியுள்ளது.
இதனை அங்கிருந்த ஆண்கள் சிலர் கண்டதும் இணைந்து அந்த பெண்ணிற்கு பிரசவம் பார்த்து ஆண் குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர். பின்பு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த பெண்ணையும், குழந்தையையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.