Categories
தேசிய செய்திகள்

எகிறிய எண்ணிக்கை… திக்குமுக்காடும் மகாராஷ்டிரா… ஒரே நாளில் புதிதாக 328 பேருக்கு கொரோனா உறுதி!

மகாரஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 328 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 3,648 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் கிரேட்டர் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனில் மொத்தம் 184 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. புனேவில் புதிதாக 78 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 991 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும், 43 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ” இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,378 ஐ எட்டியுள்ளது. மேலும் இன்று வரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 480 ஆக உயர்ந்தது. சுகாதார அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, சுமார் 1992 பேர் இந்த கொடிய நோயிலிருந்து மீண்டுள்ளனர்” என தெரிவித்தார்.

இதை நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று பாதிப்புகளின் எண்ணிக்கை உச்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் 328 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு மொத்த எண்ணிக்கை 3,600 -ஐ தாண்டியது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுக்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும், மகாராஷ்டிராவில் பாதிப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

Categories

Tech |